/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
/
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 15, 2025 07:44 AM
கிள்ளை, : சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில், நாளை 16 மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025 - 2026ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு அரசு கலைக்கல்லுாரிகளில் கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் கூடுதல் இடங்களை அதிகரித்து, மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், பல்கலைகழக அனுமதி பெற்று கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் ஏற்கனவே நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்த மாணவர்களுக்கு இனசுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் நாளை 16 மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது.
16ம் தேதி பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), இயற்பியல், பொதுவேதியல், கணினி அறிவியல், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், தொழில் வேதியியல் (ஆங்கில வழி), தாவரவியல், விலங்கியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), 17ம் தேதி பி.காம்., (ஆங்கில வழி ) பி.ஏ., பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் (ஆங்கில வழி), பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.