தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: பைனான்ஸ் ஊழியர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: பைனான்ஸ் ஊழியர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: பைனான்ஸ் ஊழியர் பலி


UPDATED : ஜூலை 06, 2026 03:36 PM

ADDED : ஜூலை 06, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 03:36 PM ADDED : ஜூலை 06, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இரண்டு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் பைனான்ஸ் ஊழியர் இறந்தார்.

நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜீவன், 32. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை வாங்க கடைக்கு சென்றார்.

நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை அருகே சென்றபோது, எதிர் திசையில் பண்ருட்டியை சேர்ந்த சூர்யா, 23; ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த ராஜீவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது. படுகாயம் அடைந்த சூர்யா கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us