/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
/
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : ஆக 24, 2025 07:05 AM

கடலுார் : கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியில் இருந்த போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவி தொகையை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்.
கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளஞ்சேரன் 47; கடலுார் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் பணியில் இருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.
இளஞ்சேரன் குடும்பத்திற்கு உதவும் வகையில் கடலுார் மாவட்ட போலீசார் 'வாட்ஸ் ஆப்' குரூப் மூலம் 1 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதனை இளஞ்சேரன் மனைவி இந்துமதி, மகன் தர்ஷன், மகள் கனிஷ்கா ஆகியோரிடம் எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் மனிஷா, சார்லஸ், அப்பாண்டைராஜ், போலீசார் 'வாட்ஸ் ஆப்' குரூப் நண்பர்கள் சுந்தரம், ராமச்சந்திரன், மகேந்திரன், இளங்கோவன், முரளி, அறிவரசு, பாபு, செந்தில்குமார், அருண், ராஜதுரை உடனிருந்தனர்.

