/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயிரிழந்த பெண் போலீஸ் குடும்பத்திற்கு நிதியுதவி
/
உயிரிழந்த பெண் போலீஸ் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : நவ 03, 2024 07:03 AM

கடலுார்: கடலுாரில் உயிரிழந்த பெண் போலீசின் குடும்பத்திற்கு, சக போலீசார் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக 2006 ம் ஆண்டு பணியில் சேர்ந்து கடலுார் அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சத்யகலா. மகப்பேரின்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த19.06.2023 ல் உயிரிழந்தார்.
அதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாட்ஸ்அப் குரூப்மூலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நிதி திரட்டி, இறந்த சத்யகலா குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. நேற்று எஸ்.பி., ராஜாராம், சத்யகலா மகன் ருத்ரேஷின் பெயரில் எல்.ஐ.சி., நிறுவனத்தில் தொகை காப்பீடு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் மற்றும் போலீசார்் சுந்தரம், இளங்கோவன், முரளி,பார்வதி, ராதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.