/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்
/
கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 30, 2025 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் :  அதிகளவு கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு ஆர்.டி.ஓ., அபிநயா, ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் வந்த போது, கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், அளவுக்கு அதிகமாக கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. உடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். வி.ஏ.ஓ., சேகர் அளித்த புகாரின் பேரில் லாரிகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

