/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கைரேகை பதிவு! மாவட்டத்தில் இதுவரை 69 சதவீத பணிகள் முடிவு
/
குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கைரேகை பதிவு! மாவட்டத்தில் இதுவரை 69 சதவீத பணிகள் முடிவு
குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கைரேகை பதிவு! மாவட்டத்தில் இதுவரை 69 சதவீத பணிகள் முடிவு
குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கைரேகை பதிவு! மாவட்டத்தில் இதுவரை 69 சதவீத பணிகள் முடிவு
ADDED : மார் 08, 2024 06:41 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 69 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவச மாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' (பி.ஓ.எஸ்) எனப்படும் விற்பனை முனைய கருவி யில் கார்டை ஸ்கேன் செய்து, பொருட்கள் வழங் குவது நடைமுறையில் உள்ளது.
குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்யும் வகையில் தனியாக கருவிகள் உள்ளது.
மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு ரேஷன் அட்டைதாரர்களிடம் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதிவு செய்கின்றனர். அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என, 10 தாலுகா உள்ளன. மாவட்டம் முழுதும் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன.
7 லட்சத்து 89 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. கை விரல் ரேகையை பதிவு செய்யா விட்டால் பொருட்கள் கிடைக்குமா அல்லது ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படுமா என்ற குழப்பம் சில ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய் வது கட்டாயம் இல்லை.
குடும்ப அட்டை தாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல் கூறக் கூடாது.
ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தி ரேஷன் கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டை தாரர்களின் வீடுகளுக்கு சென்று கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டுமென, கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ள 31 சதவீதம் பேரின் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகளும் படிப்படியாக நடந்து வருகிறது' என்றார்.

