என்.எல்.சி., சுரங்கத்தில் தீ 5 தொழிலாளர்கள் காயம்
என்.எல்.சி., சுரங்கத்தில் தீ 5 தொழிலாளர்கள் காயம்
ADDED : மே 26, 2026 03:16 AM

நெய்வேலி -: கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.,யின் முதல் சுரங்கத்தில், நேற்று மாலை, 4:30 மணியளவில் மிடில் பெஞ்ச் என்ற பகுதியில், மேல்மண்ணை வெட்டியெடுத்து கன்வேயர் பெல்ட் மூலமாக மண்மேடு பகுதிக்கு அனுப்பும் பணியில், பக்கெட் வீல் இயந்திரம் ஈடுபட்டிருந்தது.
அப்போது, கன்வேயர் பெல்ட்டை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த, ரோலர்களுக்கிடையே ஏற்பட்ட அதீத உஷ்ணம் காரணமாக, திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில், 100 மீட்டர் துாரத்திற்கு கன்வேயர் பெல்ட் தீப்பற்றி எரிந்தததுடன், இயந்திரத்துக்கும் நெருப்பு பரவியது. அந்தப்பகுதி முழுதுமே புகை மண்டலமானது.
இயந்திரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, 26, ரவிதேஷ், 28, உட்பட ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். என்.எல்.சி., மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
