ADDED : மார் 04, 2026 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: மின் கசிவு காரணமாக வயலில் குவித்து வைத்த மக்காச்சோளம் தீயில் கருகியது.
வேப்பூர் அடுத்த கல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஜமுனா, 45; விவசாயி. இவருக்கு ஆவட்டி அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அதில், மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலையில், கடந்த சில நாட்களாக அறுவடை பணி நடக்கிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை வயலின் ஒரு பகுதியில் குவித்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணியளவில் அவரது வயலின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு, குவித்து வைத்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்து வந்த நடராஜன் மனைவி ஜமுனா மற்றும் அவரது உறவினர்கள் தீயை அணைத்தனர்.இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

