/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பைக்கு வைத்த தீ தென்னந்தோப்பில் பரவல்
/
குப்பைக்கு வைத்த தீ தென்னந்தோப்பில் பரவல்
ADDED : மே 08, 2025 01:28 AM
நெல்லிக்குப்பம்: குப்பையை கொளுத்திய போது தென்னந் தோப்பு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பையை சேகரிக்க இடவசதி இல்லை.இதனால் குப்பையை சேகரிக்கும் இடங்களில் தூய்மை பணியாளர்கள் அந்தந்த இடங்களிலேயே தீவைத்து எரிக்கின்றனர்.இதனால் சுற்றுசூழல் பாதிக்கிறது.நேற்று மதியம் மோரை எவரெட்புரம் பகுதியில் சேகரித்த குப்பையை சாலையோரம் கொட்டி தூய்மை பணியாளர்கள் தீவைத்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த தென்னந் தோப்பில் தீ பரவியது.இதனால் நில உரிமையாளருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் வாய்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தென்னந் தோப்பில் பரவிய தீயை அணைத்தனர்.

