ADDED : பிப் 04, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி வளர்ந்து வரும் நகரமாகவும், பேரூராட்சி, ஒன்றியம், தாலுகா மற்றும் சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும் உள்ளது.
இங்கு, விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. புவனகிரியில் தீயணைப்பு நிலையம் இல்லை.
இப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட துாரம் கடந்து வர வேண்டிய உள்ளது.
இதற்கு கால விரயம் ஏற்படுவதால் பாதிப்பு தொடர் கதையாக உள்ளது. தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
