/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.எஸ்.என்.எல்., டவரில் ஏறிய ஊழியரை இறங்க விடாமல் துரத்திய குரங்குகள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ADDED : நவ 30, 2024 06:40 AM

சிதம்பரம், : குரங்குகள் மிரட்டலால் டவரில் இருந்து இறங்க முடியாமல் தவித்த பி.எஸ்.என்.எல்.. ஊழியரை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
சிதம்பரம் மாரியப்பா நகரில் பி.எஸ்.என்.எல்., டவரில், ஏற்பட்ட பழுதை நேற்று மாலை ஊழியர்கள் புண்ணியமூர்த்தி, பாலமுருகன் சரி செய்ய முயன்றனர். அதற்காக புண்ணியமூர்த்தி டவரில் ஏறி, சரி செய்துவிட்டு கீழே இறங்க முயன்றபோது, பாதி டவரில் இருந்த 10க்கும் மேற்பட்ட குரங்குகள் புண்ணியமூர்த்தியை விரட்டின.
அச்சமடைந்த புண்ணியமூர்த்தி மீண்டும் டவரின் உச்சிக்கு சென்றார்.
இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த தகவலின் பேரில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிமாறன் தலைமையிலான குழுவிரை விரைந்து சென்று, குரங்குகளை விரட்ட வெடி வெடித்தனர். குரங்குகள் நகரவில்லை.
அதனையொட்டி, கவச உடை அணிந்த தீயணைப்பு வீரர் கம்புடன் டவரில் ஏறி, குரங்குகளை அடித்து விரட்டிவிட்டு, டவர் உச்சியில் இருந்த புண்ணியமூர்த்தியை ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.