நீட் தேர்வு போராட்டம் வெற்றி: விருதையில் பட்டாசு வெடிப்பு
நீட் தேர்வு போராட்டம் வெற்றி: விருதையில் பட்டாசு வெடிப்பு
UPDATED : ஜூலை 26, 2026 05:10 PM
ADDED : ஜூலை 26, 2026 05:01 PM
விருத்தாசலம்: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்களின் போராட்ட வெற்றியை கொண்டாடும் வகையில், விருத்தாசலத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
புதுடில்லி ஜந்தர் மந்திரில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடந்து வந்த மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட வெற்றியை கொண்டாடும் வகையில், விருத்தாசலம் பாலக்கரையில் அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பட்டாசு வெடித்து கோஷமிட்டனர்.
நிகழ்ச்சிக்கு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குமரகுரு, செந்தில், இதயதுல்லா, விவசாய சங்கம் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
இதில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், வெற்றியை வரவேற்றும் கோஷமிடப்பட்டது. நிர்வாகிகள் கோவிந்தராஜ், நடராஜன், கிருஷ்ணசாமி, கணேசன், கவிதா, யோகேஸ்வரி, சேகர், வேல்முருகன், ராஜசேகர், ரமேஷ், சட்டநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
