முதல் தலைமுறை வாக்காளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
முதல் தலைமுறை வாக்காளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 01, 2026 04:29 AM

சிதம்பரம்: அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.
சிதம்பரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஒன்றியம், வல்லம்படுகை, அண்ணாமலை நகர், அம்மாபேட்டை, நாஞ்சலுார் உள்ளிட்ட பகுதியிலிருந்து, முதல் தலைமுறை வாக்காளர்களான 100 இளைஞர்கள், சட்டக் கல்லுாரி மாணவர்கள் யோகேஸ்வராஜ் மற்றும் ஹரி ஆகியோர் தலைமையில், சிதம்பரம் தொகுதியில் மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க., வில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், குமராட்சி கிழக்கு ஒன்றிய செய லாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் குமார், மாவட்ட ஐ.டி.,விங் செயலாளர் பிரபு, ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் சர்புதீன், சந்தோஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
