/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி பெருமாள் கோவிலில் முதல் சனிக்கிழமை வழிபாடு
/
புத்தேரி பெருமாள் கோவிலில் முதல் சனிக்கிழமை வழிபாடு
புத்தேரி பெருமாள் கோவிலில் முதல் சனிக்கிழமை வழிபாடு
புத்தேரி பெருமாள் கோவிலில் முதல் சனிக்கிழமை வழிபாடு
ADDED : செப் 22, 2024 02:13 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. 10:30 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. 11:00 மணியளவில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். முதல் சனிக்கிழமை வழிபாடு உபயம் கடலுார் பொன்ஜெயராமன் செய்திருந்தார்.
ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.