ADDED : ஜன 19, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட ன.
கடலுார் மீன்பிடி துறைமுகம் மற்றும் நகரப் பகுதியில் உள்ள இறைச்சி, மீன்கடைகளில் சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
நேற்று தை அமாவாசை என்பதால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பெரும்பாலான மக்கள் இறைச்சி, மீன்கள் வாங்குவதை தவிர்த்தனர்.
இதனால், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டதால் கடலுார் துறைமுகம், முதுநகர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உட்பட ப ல்வேறு இடங்களில் மார்க்கெட் பகுதிகள் விற்பனையும் மந்தமாக இருந்தது.

