/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்லி விழுந்த மீன் குழம்பு 9 பேருக்கு வாந்தி, மயக்கம்
/
பல்லி விழுந்த மீன் குழம்பு 9 பேருக்கு வாந்தி, மயக்கம்
பல்லி விழுந்த மீன் குழம்பு 9 பேருக்கு வாந்தி, மயக்கம்
பல்லி விழுந்த மீன் குழம்பு 9 பேருக்கு வாந்தி, மயக்கம்
ADDED : அக் 15, 2025 12:53 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பல்லி விழுந்த மீன்குழம்பு சாப்பிட்ட 9 பேர் வாந்தி மயக்கம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பெரிய தெருவை சேர்ந்தவர் குருநாதன்,59.; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் சமைத்த மீ்ன்குழம்பை மகன்கள்,மகள்கள்,பேரக்குழந்தைகளுடன் சாப்பிட்டார்.அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததை கண்டு அதிச்சி அடைந்தனர்.
இதனால் பயந்து போன குருநாதன், அவரது மகன் ராஜாமணி மகள் மலர்கொடி உறவினர்கள் பலராமன், இளையராணி, பேரக்குழந்தைகள் ஆர்த்தி,தர்ஷன், சோமு, சம்பத் ஆகிய 9 பேர் வாந்தி, மயக்கமடைந்து, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.