/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்கள் வரத்து குறைவு விலை 'கிடு கிடு'° உயர்வு
/
மீன்கள் வரத்து குறைவு விலை 'கிடு கிடு'° உயர்வு
ADDED : ஏப் 28, 2025 06:16 AM
கடலுார், : கடலுார் துறைமுகத்தில் மீன்வரத்து குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கடலில் மீன்கள் இனப்பெருக்கம் காரணமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய படகுகள், ஃபைபர் படகுகள், கட்டுமரங்கள், துாண்டில் போன்றவற்றை பயன்படுத்தி மீன்கள் பிடித்து வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்து சிறிய அளவில் விற்பனை செய்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க ஏராளமானோர் கூடுவர். நேற்று அமாவாசை என்பதால் கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் பொது மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இருப்பினும் மீன்கள் விலை உயர்வாக இருந்தது.
கிளி மீன் சிறியது கிலோ 180 ரூபாய்க்கும், கொடுவா மீன்கள் 600, இறால் 300, கவளை மீன் சிறியது 150, வஞ்சரம் 1200 ரூபாய்க்கும் விற்பனையானது. விலை உயர்வால் மீன்கள் அதிகளவு விற்பனையாகவில்லை.

