/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அருகே படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
/
கடலுார் அருகே படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
ADDED : டிச 16, 2024 07:20 AM

கடலுார்; கடலுார் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் அடுத்த சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன், 58. இவர், தனது மகன் ஜெகன், 32; மற்றும் சேகர், 52; ஆகியோருடன் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது. ஜானகிராமன் மற்றும் சேகர் அதே படகை பிடித்து தப்பினர். ஆனால், படகில் இருந்து கடலில் விழுந்த ஜெகன் மாயமானார்.
அவரை, ஜானகிராமன், சேகர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கரைக்கு வந்த இருவரும், ஜெகன் மாயமாகியது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கடலோர காவல் படையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஜெகனை தேடி வருகின்றனர்.