/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழங்குடி பட்டியலில் சேர்க்க மீனவர் கட்சி கோரிக்கை
/
பழங்குடி பட்டியலில் சேர்க்க மீனவர் கட்சி கோரிக்கை
ADDED : மார் 05, 2024 05:52 AM

கடலுார்: கடலுாரில் தேசிய மீனவர் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கட்சியின் மாநிலத் தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் ஏழுமலை, செயலாளர் உதயகுமார், பொருளாளர் அன்பு, டாக்டர் நாராயணன், திருநாவுக்கரசு, கோபால்சாமி, லட்சுமணன், நெப்போலியன், சாராங்கபாணி, அருட்செழியன், வக்கீல்கள் அன்பரசன், யுவராஜா, மணிரத்தனம் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார், பொதுச்செயலாளர் சேனாதிபதி சின்னதம்பி, பொருளாளர் வேலவன், தலைமை ஆலோசகர் கனகசபை, ஆலோசகர் காசி கம்ரூஜ்மான், மகளிரணி லோகியா திரேஷ், சோனாலி பேசினர்.
மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் மீனவ வேட்பாளரை ஆதரிப்பது. மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியில் மீனவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

