/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்
/
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்
ADDED : ஜூன் 16, 2025 01:16 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
நாளுக்கு நாள் கடல் வளம் அழிந்து வருவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கோடை காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மாவட்டத்தில் மீண்டும் கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் ஆயத்தமாகினர். வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருப்பதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று காற்றின் வேகம் குறைந்ததால் கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.