/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீனவர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
/
மீனவர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 06:10 AM

கடலுார்; மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் அருள்தாஸ், மாநில அரசு ஊழியர் பேரவை தலைவர் ரவிசங்கர், ஆலோசனைக்குழு தலைவர் அண்ணாமலை, இளைஞரணி பலராமன், ஆலோசனைக்குழு மதி, ராதா, சிவராமன், கிள்ளை செழியன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசு சார்பில் வீடு வழங்கி 18ஆண்டுகள் ஆகியும், பட்டா வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா வழங்கவில்லையென்றால், வரும் 24ம் தேதி கடலுாருக்கு வரும் துணை முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தி பேசினர்.