சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை: கலெக்டர் எச்சரிக்கை
சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை: கலெக்டர் எச்சரிக்கை
UPDATED : ஆக 04, 2026 11:16 PM
ADDED : ஆக 04, 2026 10:13 PM
கடலுார்:-கடலில் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் விடுத்துளு்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சிலர் பதிவு செய்யப்படாத படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தவோ, பதிவு செய்யப்படாத படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடவோ கூடாது. மீறி ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகள் கையகப்படுத்தப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.எனவே, அனைத்து மீனவர்களும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி, சட்டபூர்வமான மீன்பிடி முறைகளை மட்டும் கடைப்பிடித்து, கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்கும், மீனவர்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஒத்துழைத்திட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
