ADDED : ஜன 17, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: என்.எல்.சி., - தொ.மு.ச., மற்றும் நகர தி.மு.க., சார்பில் கட்சி கொடியேற்றி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குட்பட்ட 30 வட்டங்களிலும் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் என்.எல்.சி., - தொ.மு.ச., மற்றும் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலமுருகன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, நகர செயலாளர் குருநாதன், தொ.மு.ச., பாரி, திருமாவளவன், ஐயப்பன், அவைத்தலைவர்கள் நன்மாறபாண்டியன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.