தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொடிகம்பங்கள் அகற்றும் பணி  

கொடிகம்பங்கள் அகற்றும் பணி  

கொடிகம்பங்கள் அகற்றும் பணி  


ADDED : மே 26, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : புவனகிரி பகுதியில் சாலையோரம் உள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்களை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில், தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள அரசியல் கட்சியினருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

இருப்பினும் புவனகிரி பகுதியில் நெடுஞ்சாலையோரம் இருந்த கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினர் அகற்றாமல் இருந்தனர். நேற்று புவனகிரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி மேற்பார்வையில், உதவிப் பொறியாளர் ஜெகன் தலைமையிலான ஊழியர்கள், அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us