/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது
/
பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது
பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது
பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது
ADDED : அக் 13, 2025 06:40 AM

கடலுார்: சாத்தனுார் ஆணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கடலுார் பெண்ணையாற்றில் தரைப்பாலம் நிரம்பி, தண்ணீர் ஓடுகிறது.
சாத்துார் அணை நிரம்பியதால், உபரி நீர் தென் பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று விநாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொம்மந்தான் மேடு தரைப்பாலம் நிரம்பி, தண்ணீர் செல்கிறது.
இதனால், தரைப்பாலம் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக கடலுார் மாவட்ட பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்க, துணி துவைக்க ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.