ADDED : ஏப் 02, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : கடலுார் தெற்கு மாவட்ட காங்., சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணநல்லுார் கிராமத்தில் உள்ள தாய் முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் நஜிர் அகமது தலைமை தாங்கி முதியோர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம், வட்டாரத் தலைவர் திருவரசமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், லால்பேட்டை முன்னாள் நகரத் தலைவர் நியாமத்துல்லா, பன்னீர்செல்வம். கண்ணதாசன், செல்லதுரை உட்ட பலர் பங்கேற்றனர்.

