/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.எஸ்.ஜெயின் பள்ளியில் உணவு திருவிழா
/
சி.எஸ்.ஜெயின் பள்ளியில் உணவு திருவிழா
ADDED : ஆக 29, 2025 11:48 PM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.
விழாவிற்கு சி.எஸ்.ஜெயின் கல்வி குழுமங்களில் தாளாளர் மகாவீர்சந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்விக்குழும ஆலோசகர், பார்மசி கல்லுாரி முதல்வர் அபிராமி மகாவீர்சந்த் வரவேற்றார்.
பள்ளி மாணவ, மாணவிகள் தயாரித்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகள் பார்வைக்கும், ருசி பார்க்கவும் வைக்கப்பட்டிருந்தது. சிறந்த உணவு வகைகள் தயாரித்திருந்த 15க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மெட்ரிக்குலேஷன் முதல்வர் லியோ பிராங்க்ளின் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நாளா சங்க முன்னாள் தலைவர் தனரேகா, பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.