/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2024 08:40 AM

கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். கிருஷ்ணகுமாரி, கிருஷ்ணவேணி, வளர்மதி, விஜி, கிருஷ்ணமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன், சத்துணவு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினர்.
இதில், தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 6,750 ரூபாய் மற்றும் அகவிலைபடியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் ஞானஜோதி, ராஜாமணி, உதயகுமார், அல்லிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் ராதா நன்றி கூறினார்.

