/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் மினி விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சி நாளை துவக்கம்
/
விருத்தாசலம் மினி விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சி நாளை துவக்கம்
விருத்தாசலம் மினி விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சி நாளை துவக்கம்
விருத்தாசலம் மினி விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சி நாளை துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 07:03 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில், நாளை கால்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் துவங்கி 21 நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஆண்டதோறும். 21 நாட்கள் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
அதேபோல், நடப்பாண்டு, விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில் வரும் 25ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி வரை காலை, மாலை என இருவேளையும் கால்பந்து விளையாட்டிற்கு மட்டும் பயிற்சி நடைபெறும்.
இந்த பயிற்சியில், கால்பந்து விளையாட்டு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் இலவமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பால், பழம், முட்டை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடியும் தேதியில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முகாம் காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்கும். இந்த பயிற்சி முகாமிற்காக, விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கை நகராட்சி சார்பில், துாய்மை படுத்தும் பணி நேற்று நடந்து.
பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி கமிஷனர் பானுமதி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, துப்புரவு அலுவலர் சக்திவேல், விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அறிவழகன் உடனிருந்தனர்.