UPDATED : ஏப் 28, 2026 04:10 PM
ADDED : ஏப் 28, 2026 03:42 PM
பண்டைய தமிழர்களின் கலையை கற்க ஆர்வமடையும்,ஜென் ஆல்பா தலைமுறையினர்.
பண்டைய தமிழர்களின் தற்காப்பு கலைகளான சிலம்பம், குஸ்தி, மான் கொம்பு சுற்றுதல், கத்தி சண்டை உள்ளிட்டவைகள் ஆகும். இந்த தற்காப்பு கலைகள் நாகரீக வளர்ச்சியின் காரணமாக, காலப்போக்கில் மெதுவாக அழிந்து வருகின்றன.
டிஜிட்டல் உலகில் கம்ப்யூட்டர் வளர்ச்சியால் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பல்வேறு பணிகள் விரைவாக நடக்கிறது. 2010 முதல் 2025 வரை பிறந்த குழந்தைகள் ஜென் ஆல்பா தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த தலைமுறையினரின் பெற்றோர்கள், பண்டைய தற்காப்பு கலைகள் மீது, ஈடுபாடு உள்ளவர்களாக உள்ளனர்.
எனவே இந்த பெற்றோர்களிடம், பண்டைய தற்காப்பு கலைகளான சிலம்பம், குஸ்தி உள்ளிட்டவைகளை தங்கள் குழந்தைகளுக்கு, பயிற்று விக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை, அவர்களின் பெற்றோர்கள் மாலை நேரங்களில் சிலம்பம் பயில்வதற்கு, தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். எனவே அப்பகுதிக்கு வரும் பயிற்சியாளர் உதவியுடன், சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்
தற்போது ஜென்சி ஆல்பா
தலைமுறையினர், சிலம்பம் கற்க ஆர்வமடைந்துள்ளனர்.
