தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கட்சி தாவி வந்தவர்களுக்கு பதவி: த.வெ.க., வினருக்கு தலைமை 'செக்'

கட்சி தாவி வந்தவர்களுக்கு பதவி: த.வெ.க., வினருக்கு தலைமை 'செக்'

கட்சி தாவி வந்தவர்களுக்கு பதவி: த.வெ.க., வினருக்கு தலைமை 'செக்'


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது. தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.,வினர் பலர் த.வெ.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சி பலப்படுமே என்று சிறிதும் யோசிக்காமல,் உள்ளூர் த.வெ.க., வினர் பதவி, ஆளும் அதிகார சுகத்தை நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என புதிதாக இணைந்தவர்களிடம் வரவேற்காமல் புறம்தள்ளி இருந்தனர்.

இந்நிலையில் கட்சித் தலைமை, எதிர்வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள நல்ல தேர்தலில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் வேண்டும் என கருதியும், கட்சியில் பலத்த கட்டமைப்பை உருவாக்கிடும் பொருட்டு, அ.தி.மு.க.,வினர் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கியதோடு, இடைத்தேர்தலில் 'அசைன்மென்ட்' கொடுத்து, தேர்தல் பணியில் களமிறக்கியது.

தொடர்ந்து உள்ளூர் நிர்வாகிகள், புதிய நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து கட்சித் தலைமைக்கு தகவல் பறந்துள்ளது. அதன் பின்னர்தான் பல பகுதிகளில் முழு ஒத்துழைப்போடு த.வெ.க., வினர் செயல்படத்துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us