தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

 வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

 வெளிநாட்டு கரன்சி பறிமுதல்


ADDED : மார் 19, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வெளி நாட்டு கரன்சியை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை-கும்பகோணம் சாலை குமாரக்குடி பெட்ரோல் பங்க் அருகே காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையில் காலை 7:30 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன், ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

சென்னையில் இருந்து வந்த காரினை பரிசோதனை செய்தபோது அதில் வந்தவர்களிடமிருந்த துபாய் நாட்டு கரன்சி, இந்திய மதிப்பில் 1லட்சத்து 88 ஆயிரத்து 375 ரூபாய் மற்றும், இந்திய பணம் ரூ. 11 ஆயிரம் என இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், ராஜமன்னார்குடி கிழக்குத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ் என்பவர் துாபாயிலிருந்து, சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கி சொந்த ஊருக்கு செல்வதற்கு வாடகை காரில் பணம் எடுத்து சென்றது தெரியவந்தது.

பறிமுதல் பணத்தை பறக்கும் படை அதிகாரி பாபு,சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன், ரகுநாதன் ஆகியோர் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us