/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்து கிடந்த மயில் வனத்துறையினர் மீட்பு
/
இறந்து கிடந்த மயில் வனத்துறையினர் மீட்பு
ADDED : பிப் 23, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த பெண் மயிலை வனத்துறையினர் மீட்டனர்.
விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை அருகே, நேற்று பகல் 12:00 மணியளவில் மயில் ஒன்று இறந்து கிடந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் இறந்த மயிலை மீட்டு, விசாரணை நடத்தினார்.
அதில், ஒன்னரை வயதுடைய பெண் மயில், ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதி இறந்திருப்பது தெரிந்தது.
தொடர்ந்து, கால்நடை மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை செய்து, கருவேப்பிலங்குறிச்சி அரசு காப்புக்காட் டில் புதைக்கப்பட்டது.