/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2024 06:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், மண்டல செயலாளர் அருண், நகர துணை செயலாளர் மணிவண்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகர அவைத் தலைவர் தங்கராசு, பொருளாளர் முக்தார் அலி, நிர்வாகிகள் வளர்மதி கண்ணன், ஆண்டாள், மலர்கொடி, மகளி ரணி தமிழ்ச்செல்வி, ரம்யா, தவச்செல்வி, மும்தாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.