/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை 'மாஜி' அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
/
வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை 'மாஜி' அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை 'மாஜி' அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை 'மாஜி' அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
ADDED : மே 19, 2025 06:38 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., எம்.பி., நிதி மற்றும் எம்.எல்.ஏ., நிதியில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்திய மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் மகளிரணி ஜெயப்பிரியா, அண்ணாதொழிற்சங்கம் ராமலிங்கம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் கொளஞ்சிநாதன், ஜெ., பேரவை மாவட்ட தலைவர் ராஜவர்மன், இணை செயலாளர் வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். சண்முகம் எம்.பி., 25 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்திய மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'கற்பனை உலகத்தில் மிதக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கான நல்ல திட்டங்கள் ஏதும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி உள்ளிட்டவைகளை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தியது.
தேர்தல் வாக்குறுதிகளை திமு.க., நிறைவேற்றவில்லை' என்றார். ஒன்றிய செயலாளர்கள் விநாயமூர்த்தி, கருப்பன், சீனிவாசன், பச்சமுத்து, வேல்முருகன், நகர செயலாளர்கள் சந்திரகுமார், செல்வக்குமார், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.