தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் விழா

 முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் விழா

 முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் விழா


ADDED : பிப் 16, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில், முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் நுாற்றாண்டு பிறந்தநாள் விழா, வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்தது.

வேலுார் வி.ஐ.டி., கல்வி குழும வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலை வகித்தார்.

ராசராசன் சுவாமிநாதன் வரவேற்றார். விழா சிறப்பு மலரை ஸ்ரீதர் வாண்டையார் வெளியிட, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகுமணி பெற்றுக் கொண்டார்.

இதில், ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையில், 'இன்று 100 வயது வாழ்வதே பெரும் சாதனை. அப்படிப்பட்ட சாதனையாளருக்கு விழா எடுப்பதில் பெருமை. எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், அங்கம் வகித்து, 13 துறைக்கு, அமைச்சராக, இவர் ஒருவரே பணியாற்றிய சாதனையாளர்.

இரு முறை நகரமன்ற தலைவர், இரு முறை எம்.எல்.ஏ., இரு முறை எம்.பி., யாக இருந்தும், சிதம்பரத்தில் ஒரு சொத்தும் அவருக்கு இல்லை' என்றார்.

இதில், திருமாவளவன் எம்.பி., முன்னாள் எம்.பி., இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் நல்லுசாமி, அருணாச்சலம், முன்னாள் எம்.எல்.ஏ., மருதுார் ராமலிங்கம், மா.கம்யூ., முன்னாள் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில குழு மணிவாசகம், ஸ்ரீ ராகவேந்திரர் டிரஸ்ட் தலைவர் ராமநாதன், திராவிடர் கழக இளங்கோவன், சித்தார்த்தன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் சந்திரபாண்டியன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வழக்கறிஞர் பார்த்திபன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us