முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
ADDED : ஆக 24, 2026 04:31 PM
கடலுார்: கடலுாரில் வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்று விழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் அன்னதானம் வழங்கினார். வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்று விழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கடலுார் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் பிரவீன் ஏற்பாட்டில் டவுன்ஹால் அருகில் நடந்தது. சிறப்பு விருந்தினர் முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் ரவிச்சந்திரன், மாநகர கவுன்சிலர்கள் சுமதி மகேஸ்வரி், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விஜயன், சண்முகம் மற்றும் ராம்குமார், விஜயன், வேணு, சிவக்குமார், அருண், ராஜேஷ், கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
