/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேங்கியுள்ள குப்பைகளால் துர்நாற்றம் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம்

ADDED : அக் 21, 2024 06:52 AM

கடலுார்: கடலுாரில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளால் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைகின்றனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடு, நகைக்கடை வீதியில் இருந்து மிஷன் சந்து தெரு செல்கிறது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் மற்றும் மார்க்கெட் தெருவிற்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள காலியிடத்தில், குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அங்கு வீசப்படும் டீ கப் போன்ற பொருட்களில் தேங்கும் மழை நீரில் டெங்கு கொசு உற்பத்தி டெங்கு காய்ச்சல் பரவு அபாயம் உள்ளதால் அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.