/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா

ADDED : அக் 14, 2025 07:14 AM

கடலுார்; வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க புதிய அலுவலகத்திற்கு அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார்.
விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் புதிய அலுவலகம் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய அலுவலக கட்டுமான பணிக்கு அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, இச்சங்கத்தின் மூலம் கூட்டுறவு பட்டாசு கடையை திறந்து வைத்தார். இந்தாண்டு 20 லட்சம் ரூபாய்க்கு பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
விழாவில், மண்டல இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, விருத்தாசலம் சரக துணை பதிவாளர் கவிதா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பரவளூர் மற்றும் தொட்டிக்குப்பம் கூட்டுறவு சங்க செயலாளர்கள், கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இணைப் பதிவாளரிடம் வழங்கினர்.