/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருட்டில் நான்கு சக்கர வாகன பயணம் தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம்
/
இருட்டில் நான்கு சக்கர வாகன பயணம் தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம்
இருட்டில் நான்கு சக்கர வாகன பயணம் தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம்
இருட்டில் நான்கு சக்கர வாகன பயணம் தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம்
ADDED : ஜன 30, 2024 12:49 AM

உளுந்துார்பேட்டை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஒடுவம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா, 50. இவரது மனைவி ஜெயா, 40. மகள்கள் வசந்தி, 18, வைதேகி, 13. இவர்கள், நேற்று முன்தினம் சென்னை நோக்கி, 'டொயோட்டா குவாலிஸ்' காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அழகுராஜா ஓட்டினார்.
அதிகாலை, 3:30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே ஆசனுாரில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன் சென்ற சரக்கு லாரி திடீரென பிரேக் போட்டதால், அழகுராஜாவும் பிரேக் போட்டுள்ளார்.
போக்குவரத்து சீரமைப்பு
அப்போது, காருக்கு பின்னால் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ், அழகுராஜா கார் மீது மோதியது. இதில், நிலை குலைந்த கார், முன்னால் நின்ற சரக்கு லாரி மற்றும் சாலை மையத்தடுப்பில் மோதி நொறுங்கியது.
இந்த கோர விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கி, ஜெயா, வசந்தி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அழகுராஜா, வைதேகி படுகாயமடைந்தனர்.
தனியார் பஸ்சில் பயணித்த, 50 பேரில் சென்னை, வியாசர்பாடி ராஜேஸ்வரி, 54, செம்பரம்பாக்கம் தன்ராஜ், 52, உள்ளிட்ட 24 பேர் படுகாயமடைந்தனர்.
எடைக்கல் போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
அடுத்தடுத்து மோதல்
விபத்து காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்தன.
இந்நிலையில், எறஞ்சி அருகே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், அரசு விரைவு பஸ், வேன் ஆகிய மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.