குரூப் 2, 2ஏ தேர்விற்கு 27 ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
குரூப் 2, 2ஏ தேர்விற்கு 27 ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 21, 2026 09:11 PM
கடலுார், ஆக. 22–தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27 ம் தேதி துவங்குகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக டி.என்.பி.எஸ்.சி, உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நுாலக வசதி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2026-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்டநிரலின்படி குரூப் 2, 2ஏ தேர்விற்கான அறிவிப்பு கடந்த 11ம் தேதி வெளியிட்டுள்ளது. இதே்தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் நோக்கில் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை எண்.8, ஆற்றங்கரைத்தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா தியேட்டர் எதிரில் உள்ள கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் பாஸ்போட் அளவு புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
