ADDED : மார் 23, 2026 10:24 PM

விருத்தாசலம்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, விருத்தாசலம் அரிமா சங்கம் சார்பில், 103வது இலவச கண் சிகிச்சை முகாம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கினார். ஶ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க முதல் துணை கவர்னர் கனகதாரன், இரண்டாம் துணை கவர்னர் கமல் கிஷோர், முன்னாள் கவர்னர்கள் முரளி, கீதா, மாவட்ட தலைவர் சிவாகந்தன், கடலுார் ஜெய் மகாவீர் ஜூவல்லரி அசோக்மேத்தா, கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி மனோகர்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஜெய்சிங், பன்னாலால், புக்ராஜ் பண்டியா, தீரஜ், வட்டார தலைவர் மணியன், மாவட்ட தலைவர்கள் ஞானமூர்த்தி, ஜெகன்நாதன், லக்ஷ்மி நாராயணன், சோகன்லால், பிரபு, கே.எஸ்.ஆர்., ஹைடெக் பள்ளி ரஞ்சித், சுந்தரராஜன், சபாநாதன், உட்பட பலர் பங்கேற்றனர். இந்த முகாமில், 351 பேர் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொருளாளர் பாலு நன்றி கூறினார்.
