/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிரிக்குப்பம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்
/
பாதிரிக்குப்பம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : அக் 05, 2024 11:23 PM

கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பத்தில், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட முகாமில், சென்ட்ரல் அரிமா சங்கம், சில்வர் ஸ்டார் அரிமா சங்கம் இணைந்து பாதிரிக்குப்பம் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது.
முகாமிற்கு மண்டல தலைவர் உமாசங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரவீன் ஐயப்பன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
நிர்வாகி சித்ராலயா ரவிச்சந்திரன், வட்டார தலைவர் ராஜேந்திரன், சென்ட்ரல் சங்க தலைவர்பன்னீர்செல்வம், சில்வர்ஸ்டார் சங்கத்தலைவர் சுரேஷ்ராஜன், செயலாளர் தனபாபு, பொருளாளர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மகாத்மாகாந்தி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு, இருதயநோய், குழந்தைகள் மருத்துவம், கண், மூட்டு, முதுகு மற்றும் இடுப்பு வலி உட்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.