ADDED : பிப் 13, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கவுதமன், பாரத், கண்ணன், தேவசேனன் உள்ளிட்ட14 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கண், காது, மூக்கு உள்ளிட்ட சிகிச்சைகள் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், ஓட்டுநர் உரிமம் எடுக்க வந்தவர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.