ADDED : மார் 11, 2024 05:41 AM

வடலுார், : குறிஞ்சிப்பாடியில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மருத்துவரணி சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, கிழக்கு மாவட்ட மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
துணை அமைப்பாளர் டாக்டர் அவினாஷ்குமார் முன்னிலை வகித்தார். 7வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் வரவேற்றார்.
டாக்டர்கள் செல்வம், சிவசெந்தில், தினேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல், தைராய்டு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் கோகிலா குமார், துணை சேர்மன் ராமர், பேரூராட்சி செயலாளர் ஜெய்சங்கர், வடலூர் நகராட்சி சேர்மன் சிவக்குமார், தி.மு.க., நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் சேகர், தமயந்தி செங்கல்வராயன், லட்சுமி திருஞானம், உமா மணிகண்டன், திலீபன், உமா கணேசன் மற்றும் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் வெற்றி, சீத்தாராமன், கூட்டுறவு ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முத்து சரவணன் நன்றி கூறினார்.
