ADDED : ஏப் 10, 2025 01:17 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கே.கே., நகர் மற்றும் ஒருங்கிணைந்த நகர் நல சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு சங்க தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிருஷ்ணா சமூக சேவை சங்க தலைவர் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.
செங்குட்டுவன் வரவேற்றார். செயலாளர் கண்ணன், பொருளாளர் சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
ஆறுபடைவீடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண், தோல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
