ADDED : டிச 22, 2025 05:49 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம், நிலா பாலி கிளினிக், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தெற்கு பிச்சாவரம் சமுதாய நலக்கூட்டத்தில் நடந்த முகாமிற்கு டாக்டர் இன்பநிலை தலைமை தாங்கினார். பி.டி.ஓ., அருளானந்தம் முன்னிலை வகித்தார்.
குடிநீர் வடிகால் வாரிய ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் அருளானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், குழந்தை நல டாக்டர் ஹரிபிரவின் தலைமையிலான டாக்டர்கள் திவ்யா, ஹரிபிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு மருந்துகள் வழங்கினர். முகாமில் 280 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் விக்னேஷ்வரன், சிவசங்கர் பங்கேற்றனர்.
