ADDED : ஜன 23, 2026 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளியும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் இணைந்து பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
சேர்மன் ஜெயந்தி முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் சீனுவாசமணி, விக்னேஷ்வரன், அருண் சோமசுந்தரம்,ஹர்ஷித்,சுப்புராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்ட, 500 க்கும் மேற்பட்டவர்களை பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர்.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், துணைத்தலைவர் கிரிஜா, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா,மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், பள்ளி இயக்குனர்கள் உதயகுமார்,பிரபு கலந்து கொண்டனர்.

