ADDED : ஜன 28, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டியில் பா.ம.க.,சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பண்ருட்டியில் பா.ம.க., சார்பில் சென்னை கிளீனிக்கல்ஸ் பன்னாட்டு ஆஸ்பிட்டல் மற்றும் பண்ருட்டி கே.கே., கிளினிக் இணைந்து கல்லீரல் மற்றும் கணையம் பரிசோதனை செய்யும் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் கே.கே., கிளினிக் டாக்டர் கவுரிசங்கர் வரவேற்றார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சினிமா இயக்குனர் தங்கர்பச்சான், டாக்டர் சங்கீதா ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
முகாமில், 110 பேருக்கு பைப்ரோ ஸ்கேன் பரிசோதனை செய்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் சதீஷ்குமார் மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்.

