/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஜன 02, 2025 11:00 PM
கடலுார்; அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுகொண்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 6ம் தேதி துவங்கப்பட உள்ளது.
வாரந்தோறும் திங்கள் முதல் புதன் வரை மாலை 2:00 மணி முதல் 5:00 வரை நடைபெறும். பயிற்சி வகுப்புகளில் வாரத் தேர்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கடலுார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கடலுார் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.